கேந்திரிய வித்தியாலய பள்ளியில் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுசரிப்பு

கோவை, அக்டோபர் 31: சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளியில் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

கோவை, சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளி மற்றும் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து இன்று நடைபெற்ற "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதனை துணை இணை காவல்துறை ஆணையர் ஏ.முருகசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் என்பது சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுகளைப் போற்றும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில், கேந்திரிய வித்தியாலய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சாவித்திரி. டி.ராஜன், சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில், கோவை புலனாய்வு இயக்குநரக துணை இயக்குநர் கரீனா பி.தெங்கமம் தேச ஒற்றுமை குறித்து உரையாற்றினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...